பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்9



அறத்துப்பால் இல்லற இயல் 9 4, 5. இல்வாழ்க்கை (இல்லறத்தின் சிறப்பும், இல்வாழ்வானுடைய பண்புகளும், கடமைகளும்) இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்ஆற்றின் நின்ற துணை. 41 இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர் மனைவி, மக்கள் ஆகிய மூன்று திறத்தார்க்கும் நல்லொழுக்க நெறியில் நின்ற சிறந்த துணையாக இருப்பவனாவான். துறந்தார்க்கும் துல்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. 42 துறந்தவர்களுக்கும். வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக இருக்கக் கடவன். . தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு 43 ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. முன்னோர்கள். தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும். பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழிளஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44 மற்றவர்கள் கூறும் பழிக்கு அஞ்சிப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து வாழ்கின்ற இல்லறத்தானுடைய பரம்பரை என்றும் குறைவின்றி இருப்பதாகும். . அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. 45 இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும்.