பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்21



அறத்துப்பால் இல்லற இயல் 21 11. செய்ந்நன்றி அறிதல் (தனக்குப் பிறர்செய்த நன்மையினை மறவாதிருத்தல்) 1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 101 தனக்கு, முன்பு ஒர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறருக்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா. . காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது. f{}2 ஒருவன் காலமறிந்து அரிய காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அக்காலத்தினை நோக்க அது இவ்வுலகத்தினையும் விட மிகவும் பெரியதாகக் கருதப்படும். பயன்துக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. 103 தனக்குத் திரும்பி வருகின்ற பயனைக் கருதாமல் ஒருவன் செய்த உதவியினை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலையும் விடப் பெரிதானதாகும். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 104 தினையளவினதாகிய நன்மையினைச் செய்தாலும் அதனைப் பனையளவினதாகக் கொள்ளுவார்கள். யாரென்றால், அக்கருத்தின் பயனையறிந்தவர்கள் என்பதாம். . . உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105 உதவிக்கு அளவு என்பது இல்லை. அவ்வுதவியினைப் பெற்றுக் கொண்டவரது நற்குணத் தகுதியின் அறிவினைப் பொறுத்ததே அவ்வுதவியின் அளவுமாகும்.