பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்23



அறத்துப்பால் இல்லற இயல் 23 12. நடுவு நிலைமை (யாவரிடத்திலும் நடுவு நிலைமையில், சமமாக நடந்துகொள்ளுதல்) - தகுதி எனஒன்று நன்றே, பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின். 1 i 1 அயலார், பகைவர், நண்பர் என்ற யாவரிடத்திலும் நடுவுநிலைமை என்ற முறைமை விடாமல் நடந்துகொண்டால், நடுவு நிலைமை எனப்பட்ட ஓர் அறமே போதுமாள நன்மையாகும். செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 1 + 2 நடுவு நிலைமையுடையவனது செல்வமானது அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாதுகாப்பான உறுதியாதலை உடையதாகும். நன்றே தரிலும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 1 + 3 தீமையின்றி நன்மையினையே தருவதாக இருந்தாலும் நடுவு நிலையை நீக்கப்பட்டு வருகின்ற செல்வத்தின்ன அப்போதே ஒழித்துவிடுதல் வேண்டும். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். 114 நடுவுநிலைமை உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள் என்பதனை அவரவர்களுக்குப் பின், எஞ்சி நிற்கும் நன்மை தீமைகளால் அறிந்து கொள்ளப்படும். கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. 115 கெடுதியும் பெருக்கமும் யாவர்க்கும் இல்லாததல்ல. அவை பிறவியிலேயே அமைந்து கிடப்பனவாகும். ஆதலால், மனத்தில் ஒரவஞ்சனையின்றி - ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடாமல் நடுவு நிலைமையுடன் இருப்பதே பெரியவர்களுக்கு அழகாகும்.