பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

30



திருக்குறளார் தெளிவுரை 6. 10. பகைபாவம் அச்சம் பழி.என நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண். # 48 புகை, பாவம், அச்சம், பழி ஆகிய இந்த நான்கு குற்றங்களும் பிறன் மனைவியினிடத்தே நெறிகடந்து செல்லுபவனைவிட்டு ஒருகாலும் நீங்காவாம். அறன்இயலான் இல்வாழ்வான் என்டான் பிறன்இயலாள் பெண்மை நயவா தவன். 147 அறமாகிய தன்மையுடன் இல்லறத்தில் வாழ்டவன் என்று சொல்லப்படுபவன் பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பில் இருப்பவளது பெண்தன்மையினை விரும்பாதவனே ஆவான். . பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. 4 48 பிறன் மனைவியை உள்ளத்தில் நினைக்காத பெரிய ஆண்தன்மை சான்றோர்களுக்கு அறமும் ஆகும்; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும், நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பின் பிறற்கு உரியாள் தோள்தோயா தார். 1 49 அச்சம் தருவதாகிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளையும் அடைவதற்கு உரியவர்கள் யாரென்றால், பிறனுக்கு உரியவளது தோள்களை அணையாதவர்கள் என்பதாம். அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான் பெண்மை நயவாமை நன்று. 150 ஒருவன் அறத்தினைத் தனக்கு உரித்தாகச் செய்யாமல் புறம்பான தீமைகளையே செய்பவனானாலும், பிறலுடைய உரிமை எல்லைக்குள் இருப்பவளது பெண்மையை விரும்பாமல் இருப்பது நல்லதாகும்.