பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்33



அறத்துப்பால் இல்லற இயல் 33 17. அழுக்காறாமை (பொறாமை என்னும் தீயகுணம் இல்லாதிருத்தல்) 1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. 161 ஒருவன் தன்னுடைய மனத்தில் பொறாமை என்னும் குற்றம் இல்லாத தன்மையினைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும். 2. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். 162 ஒருவன் யாவரிடத்திலும் பொறாமை இல்லாமல் இருப்பதே சிறந்த செல்வமாகும். அவன் பெறுகின்ற சீரிய செல்வங்களுள், அச்செல்வத்திற்குச் சமமானது வேறு எதுவும் இல்லை. 3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப் பான். 183 அறத்தினையும் செல்வத்தினையும் வேண்டாம் என்று சொல்லுகின்றவன், மற்றவன் செல்வத்தைக் கண்டபோது தாளாமல் பொறாமைப்படுவான். 4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் எதம் படுபாக்கு அறிந்து. 164 பொறாமையினால் தமக்குத் துன்பம் வருவதை அறிந்தவர்கள். பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள். 5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடுஈன் பது. 165 அழுக்காறு (பொறாமை) உடையவர்களுக்குப் பகைவர்கள் தீமை செய்ய வேண்டுவதில்லை. ஏனெனில், அப்பொறாமைக் குணமே அவர்களை அழிப்பதற்குப் போதுமானதாகும்.