பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறளாரின் தமையனார்
வீ. தியாகராஜன்
வாழ்த்துரை

என் இளவல், திருக்குறளார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு. வீ. முனிசாமியைப் பல்லாண்டு வாழ்க என என் இதயமார வாழ்த்துகிறேன்.

எங்களுடைய பெற்றோர்களுக்குப் பின் தாயும் தந்தையுமாக இருந்து, என் தம்பியை நான் அண்ணன் என்ற உரிமையோடும் உள்ளன்போடும் பாதுகாத்து வளர்த்து வந்தேன்.

என் தம்பி முனிசாமி, உயர்நிலைப் பள்ளியில் மாணவனாக இருந்தபோதே, ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் மனனம் செய்துவிட்டான்; பேசும் ஆற்றலையும் பெற்றான்.

என்னுடைய தம்பி திருக்குறளார், 'செயற்கரிய செயல்' என்று பெரியோர்களெல்லாம் போற்றக் கூடிய திருக்குறள் தொண்டினை இரவு பகல் என்று பாராமல் பட்டி தொட்டிகளிலெல்லாம் சென்று அயராமல் உழைத்த காரணத்தால்தான்- இன்று தமிழர்களிடையே திருக்குறள் பேசப்படுகிறது என்று சொன்னால், அது மிகையாகி விடாது.

இந்த நூல் வெளியிடுவதற்குப் பொருளுதவி செய்து என் தம்பியை மனங்குளிர வாழ்த்துகிறேன். நான் வள்ளலார் அடிமையானபடியால், அருட்பெருஞ்சோதி ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.

18/2, ஆஸ்பிட்டல் ரோடு.

மஞ்சக் குப்பம்

கடலூர்-1

உங்கள் அன்புள்ள

16.10.1992

வீ. தியாகாஜன்