பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்47



அறத்துப்பால் இல்லற இயல் 47 24. புகழ் (வாழவேண்டிய முறையில் வாழ்ந்து நிலைத்து நிற்கும் புகழினைப் பெறுதல்) 1. ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்களுக்கு ஈதலைச் செய்வாயாக; அதனால் புகழெய்தி வாழ்வாயாக; அப்புகழல்லாமல் மக்களுயிர்க்குப் பயன் வேறு எதுவும் இல்லை. - 2. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் - 232 உலகத்தில் பெருமையாகச் சொல்லுபவர்கள் சொல்லுபவையெல்லாம் வறுமையால் இரப்பவர்களுக்கு (யாசிப்பவர்களுக்கு) ஈதலினைச் செய்வதனால் ஒருவற்கு உண்டாகும் புகழேயாகும். 3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல், 233 திகரில்லாத ஓங்கிய புகழல்லாமல் இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது வேறு எதுவும் இல்லை. 4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. 234 ஒருவன் இப்பூமியின் எல்லைக்குள் அழியாத புகழினை உண்டாக்கிக் கொள்ளுவானேயானால், உலகம் அவனையல்லாமல் வருகின்ற புலவர்களைப் பாராட்டாது. 5. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது. 235 புகழுடம்பிற்குப் பெருக்கமாகும் கெடுதியும், அப்புகழுடம்பு நிலைத்து நிற்பதற்கு இறத்தலும் சிறந்த பல்கலைத் திற்மையுடையவர்களுக்கு அல்லாமல் மற்றையோருக்கு முடியாததாகும்.