பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்49



அறத்துப்பால் துறவற இயல் 49 25. அருள் உடைமை (உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டிருத்தல்) அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. 241 செல்வங்களுக்குள் சிறந்த செல்வமாவது அருளால் வரும் செல்வமேயாகும். அதுவல்லாமல், பிற செல்வங்கள் பொருளால் வருபவை. இழந்தவர்களிடத்திலும் இருப்பதாகும். நல்ஆற்றான் நாடி அருள்.ஆள்க; பல்ஆற்றான் தேரினும் அஃதே துணை. 242 பல நெறிகளிலும் நின்று ஆராய்ந்து, அருளினைத் துணையாகக் கொள்ளுவார்களாக, துணையான அறம் அருளேயாகும். பல வகைப்பட்ட நெறிகளில் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே அன்றிப் பிறிது இல்லை. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். 243 இருள் நிறைந்த துன்ப உலகத்தில் சென்று புகுதல் என்பது அருள் நிறைந்த நெஞ்சினையுடையவர்களுக்கு இல்லை. . மன்உயிர் ஓம்பி அருள்.ஆள்வார்க்கு இல்என்ப தன்.உயிர் அஞ்சும் வினை. 244 நிலையான உயிர்களைப் போற்றி அவற்றினிடம் அருளுடையவனுக்குத் தன் உயிர் அஞ்சக் கூடிய தீவினைகள் உண்டாகா என்று அறிந்தோர் சொல்லுவர். அல்லல் அருள்.ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி. 245 அருளுடையவர்களுக்குத் துன்பம் உண்டாகாது. காற்று இயங்குகின்ற வளப்பத்தினையுடைய பெரிய ஞாலத்தில் வாழ்கின்ற மக்களே அதற்குச் சான்றாவார்கள்.