பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்51



அறத்துப்பால் துறவற இயல் 51 26. புலால் மறுத்தல் , (அருள் உடையவர்களுக்குப் பொருந்தாத செயலாகும். கொலைப்பாவத்திற்குக் காரணமானது) 1. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ங்ணம் ஆளும் அருள்?. 251 தன்னுடைய உடம்பினை வளர்ப்பதற்காக, தான் மற்றொரு உயிரின் உடம்பினைத் தின்பவன் எவ்வாறு அருளினை நடத்துவான்? 2. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு. 252 பொருளால் பயனடைதல் அதனைக் காப்பாற்றாதவர்களுக்கு இல்லை. அதுபோல அருளால் பயனடைதல் என்பது ஊன் தின்பவர்களுக்கு இல்லை. 3. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். - 253 கொலைக் கருவியினைக் கையில் வைத்திருப்பவர்கள் மனம் கொலை செய்வதையே நோக்கும். அருளினை நோக்காது; அதுபோல, புலாலைச் சுவைபட உண்பவர் மனம் ஊனையே நோக்கும்; அருளினை நோக்காது. 4. அருள்அல்லது யாது.எனின் கொல்லாமை கோறல் பொருள்அல்லது அவ்வூன் தினல். 254 அருள் யாது என்று கேட்டால் கொல்லாமையேயாகும். அருள் அல்லாதது யாது என்றால் கொலை செய்வதேயாகும். கொன்ற உளனைத் தின்னுதல் தீமையாகும். 5. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. 255 ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தினால்தான் உயிர் உடம்பில் இருக்கின்றது. அவ்வுயிர் நிலைகுலைய ஒருவன் ஊன் உண்ணுவானேயானால் அவனை விழுங்கிய உலகம் மீண்டும் அவனை உமிழாது.