பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்53



அறத்துப்பால் துறவற இயல் 53 27. தவம் (தவம் இன்னதென்பதும், தவசிகளின் சிறப்பும், ஆற்றலும்) 1. உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. 261 தவத்திற்கு வடிவம் என்னவென்றால், தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவதும், தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பதுவுமேயாகும். 2. தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதுஇலார் மேற்கொள் வது. 262 தவத்தினை மேற்கொள்ளுவதென்பதும் முற்பிறவித் தவத் தன்மையுடையவர்களுக்கேயாகும். அத்தவப் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது பயனற்ற முயற்சியேயாகும். 3. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். 263 இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவிக்கு உணவு முதலியன கொடுத்து உதவவேண்டித் தவம் செய்வதை மறந்துவிட்டார்கள் போலும் 4. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். 264 பகைவரை அழித்தலும் விரும்பினவரை உயரச் செய்தலும் ஆகிய இவ்விரண்டினையும் தவசிகள் நினைத்தால் தவ வலிமையால் அவர்க்கு நடைபெறுவனவாகும். 5. வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம் ஈண்டு முயலப் படும். 265 வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறலாம் ஆனபடியால் செய்யப்படுவதாகிய தவம் இப்பிறப்பில் முயன்று செய்யப்படும். -