பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்59



அpத்துப்பால் துறவற இயல் 59 30. வாய்மை (வாய்மையினது தன்மையும் விளக்கமும்) 1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். 291 வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது மற்ற உயிர்களுக்குத் தீங்கினைச் சிறிதும் உண்டாக்காத சொற்களைச் சொல்லுதலாகும். 2. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். - 292 பிறர்க்குக் குற்றம் நீங்கிய நன்மையினைத் தருமானால் பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் இடத்தில் வைத்துக் கருதப்படும். 3. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க டொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293 ஒருவன் தனது நெஞ்சு அறிந்த பொய்யினைச் சொல்லாதிருப்பானாக அவ்வாறு பொய்த்துப் பேசினால் அவனுடைய நெஞ்சமே அவனைத் துன்பத்தில் அடைவிக்கும். 4. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். 294 ஒருவன் தனது மனதறியப் பொய் கூறாமல் நடந்து கொள்வானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் உள்ளவனாவான். 5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை, 295 ஒருவன் தனது மனத்தோடு பொருந்த வாய்மையினைச் சொல்லுவானானால்,அவன் தானமும் தவமும் ஒருங்கே செய்பவரைவிட மேலானவனாவான்.