பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்73



அறத்துப்பால் துறவற இயல் 73 37. அவா அறுத்தல் (மெய்ப்பொருள் உணர்வால் ஆசைகள் அனைத்தையும் அறுத்தல்) 1. அவாளன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு:ஈனும் வித்து. 361 எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாமல் வருகின்ற பிறப்பினை உண்டாக்கும் வித்து அவா (ஆசை) என்று நூலோர் சொல்லுவர். - 2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். 38.2 பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும். - - 3. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை யாண்டும் அஃதுஒப்பது இல், 383 'எப்பொருளையும் விரும்பாமை என்பதனை ஒக்கும் சிறந்த செல்வம் இவ்வுலகின் கண் இல்லை. அதுவேயன்றி எல்வுலகிலும் அதனை ஒப்பது இல்லை. 4. துடய்மை என்பது அவா.இன்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். 364 ஒருவருக்குப் பேரின்பு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமையே ஆகும். அது மெய்ம்மையை விரும்ப, தானே உண்டாவதாகும், 5. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். 365 பிறவியற்றவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதற்கு நேர்க்காரணமான அவா அற்றவர்களாவர். மற்ற எல்லாம் நீங்கி அது ஒன்று மட்டும் நீங்காதவர்கள் சில துன்பங்கள் அற்றவர்களேயல்லாமல் பிறவி அற்றவர்களாகார்,