பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் வாயில் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் உலகப் பொது மறை எல்லாக் காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் வாழ்க்கையின் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகின்றது. பெறுதற்கரிய பிறவியாகிய இம்மானிடப் பிறவியில் வாழ வேண்டிய முறையில் வாழ்ந்து கடமையுணர்ந்து சிறப்புடன் வாழ்வதற்கு உரிய செந்நெறிகளையெல்லாம் முறைப்பு டுத்தி அளித்தவர் திருவள்ளுவர் ஆவார். திருக்குறள் அறத்துப்பால், பொருட்டால், காமத்துப் பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். திருக்குறள் மொத்தம் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங் களைக் கொண்டதாகும். ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறட்டாக்களைக் கொண்டிருக்கின்றது. ஆக, திருக்குறளில் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் இடம் பெற்றுள் ETIEŤ, - 'பால்' என்ற பெரும் பிரிவுக்குள் இயல் என்ற பெயரில் சிறு பிரிவுகள் அடங்கியுள்ளன. அறத்துப்பாலில் பாயிர இயல், இல்லற இயல், துறவற இயல் என்பதாக மூன்று இயல்கள் உள்ளன. பொருட்பாலில் அரசியல், அங்க இயல், ஒழிபியல் என்ற மூன்று இயல்கள் உள்ளன. காமத்துப்பால் களவியல், கற்பியல் என்ற இரண்டு இயல்களைக் கொண்டிருக்கின்றது. அறத்துப்பாலில் உளள முதல் இயலான பாயிர இயலில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆக நான்கு அதிகாரங் கள் அமைக்கப்பட்டுள்ளன. -