பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்79



பொருட்பால் அரசியல் 79 40. கல்வி (கற்க வேண்டியவையும், சிறப்பும், பயனும்) 1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 391 ஒருவன். கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும். - 2. எண்ளன்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. 392 எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆகிய இரண்டினையும் அறிந்தோர், சிறப்புடைய மக்களுயிர்கட்குக் கண் என்று சொல்லுவார்கள். 3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லா தவர். 393 கண்ணுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுபவர்கள் கற்றவர்களே ஆவார்கள். கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் ஆவார்கள். 4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். 394 யாவரும் மகிழுமாறு அவர்களுடன் சேர்ந்து பழகி, இனி அவரை எப்போது காண்போம் என நினைத்துப் பிரிகின்ற தன்மையுடையதே கற்றவர்களின் தொழிலாகும். 5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர். 395 செல்வர்கள் முன்னே வறியவர்கள் நிற்றல் போல, தம்முடைய ஆசிரியர் முன்னே நின்று கல்வி கற்றவர்களே உயர்ந்தோராவர். அவ்வாறு கற்பதற்கு நாணமுற்றுக் கல்லாதவர்கள் இழிந்தோரேயாவர்.