பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்81



பொருட்பால் அரசியல் 81 41. கல்லாமை (கல்வி இல்லாமையின் இழிவு) 1. அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். 4O1 தனக்கு அறிவு நிரம்புதற்குக் காரணமான நூல்களைக் கல்லாத ஒருவன், அவையில் ஒன்றனைச் சொல்லுதல், ஆடுகின்ற அரங்கினை அமைக்காமல் உண்டை (பகடைக்காய்) உருட்டியது போன்றதாகும். 2. கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402 கல்வி இல்லாத ஒருவன் அவையில் ஒன்றைச் சொல்ல ஆசைப்படுதல் முலை இரண்டும் இல்லாத (முகிழ்த்தல் இல்லாத) பெண்ணான ஒருத்தி பெண்ணின்பத்தை விரும்பியது போலாகும். 3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். 403 தாமே தம்மையுணர்ந்துகொண்டு கற்றார் இருக்கும் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருந்தால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவர்கள் ஆவார்கள். 4. கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார், 404 கல்லாதவனுடைய அறிவுடைமை ஒரு நேரத்தில் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள். 5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லர்டச் சோர்வு படும். 405 நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவனென்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.