பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 37 கெட்டியாய்க் காத்து அதனாலே தன்னிட சீவனுக்கு வருகிற துக்கங்களைப் பொறுத்துப் பிறவுயிர்கள் மேலே தயையுடைய வர்களாயிருக்கிறது. இது சீவன்களைக் கொல்லாமலும் மாங்கி சங்களைத் தின்னாமலும் இருந்தாலல்லாது கூடாதென்பதாம். 261. உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு என்பது தவசாகிறது போசனங்கள்? முதலான துகளை விரதங் களாலே குறைக்கிறதும், பிறவுயிர்களுக்குத் தீங்கு செய்யாமை யுமா மென்றவாறு. அ 262. தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை யஃத லார் மேற்கொள் வது என்பது தவசு பண்ணிக் கொள்ளுகிறதும் முந்தின சென்மத்திலே தவசு பண்ணின பேர்களுக்கே கூடும்; அந்தத் தவசும் முன் புண்ணிய மில்லாத பேர் செய்யப்போனால் அவத்தமாய்ப் போ மென்ற வாறு. புண்ணிய முண்டாகவே யெல்லா நன்மைகளும் வருமென்ப தாம். 「己 263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்க டவம் என்பது இல்லறத்திலே இருக்கிற பேர் துறந்தவர்களுக்கு அசனமும் மருந்தும் இருப்பிடமும் கொடுக்க வேண்டுமென்று தாங்கள் தபசு பண்ணுகிறதை மறந்தார்கள் போலும் என்றவாறு. 264. ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலும் எண்ணிற் றவத்தான் வரும் என்பது 1. தன்னுடைய 2. உண்டல் 3 . முதலானவைகளை 4. அபத்தம் - டொப் 5. உணவும்