பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 94 திருக்குறள் நூல்களைக் கற்றாரிடத்து நின்ற வறுமையினுங் கல்லா தாரிடத்து நின்ற செல்வம் பொல்லா தென்றவாறு. கற்றவர் வறுமையுற்றாலு மிழிவான காரியங்களைச் செய்யார்; கல்லாதவர்களுக்குச் செல்வம் வந்தாற் பல ருக்குமுபத்திரவங்களைப் பண்ணி, ஆகாத காரியங்களைச் செய்து, தாங்களுங் கெடுவ ரென்பது. لئے } 4.09. மேற்பிறந்தா ராயி னுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு என்பது கல்வி யில்லாதவன் உயர்ந்த சாதியிலே பிறந்தவனானாலுங் கீழான சாதியிலே பிறந்து கல்வியைக் கற்றவனுடனே சரியல்ல வென்றவாறு. உடலொழிந்து போற சாதியிலும் உயிரோடு நின்று நல்ல வறிவையும் நற்கெதியையுங் கொடுக்கப்பட்ட கல் வியே பெரிய தென்றவாறு, சின் 410. விலங்கொடு மக்க ளனைய விலங்கு நூல் கற்றாரோ டேனை யவர் என்பது மிருக சாதியும் மனுஷ சாதியும் பார்த்தா லொன்றிற் கொன்று எத்தனை நன்மை யுடையவர், அத்தனை நன்மை யுண்டு. கற்றவர்களுக்குங் கல்லாதவர்களுக்கு மென்றவாறு. மிருக சாதியைப் பார்க்கிலு மனுஷ சாதிக்கு அறிவு மிகுதி யாக வுண்டாம்; அதுபோலக் கல்லாதவர்களைப் பார்க்கிலும் கற்றவர்களுக்கு அனேக மறிவுண்டான படியினாவே கல்லாத வருங் கற்றவரும் ஒத்த சாதியல்ல வென்பதாம். 0 ஆக அதிகாரம் சல்க க்குக் குறள் சளt) 1. உடலோடழிந்து என்பது அச்சு நூல் 2. போகிற ஒரு என்பது அச்சு நூல்