பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருக்குறள் துணிவு பிறக்க யிதுவே செய லென்று சொல்லுகிறதும் வல்ல வனே மந்திரி யென்றவாறு. శ్రీF 635. அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் றேர்ச்சித் துணை என்பது அரசராலே செய்யப்பட்ட தருமங்களையு மறிந்து, தனக்கு வேண்டின கல்வி கேழ்வி' யாலே நல்ல வார்த்தையை யுடைய வனாப், எக்காலமும் காரியங்கள் செய்கிற திறமையை யறிந்த வன் அரசற்கு நல்ல துணையா மென்றவாறு. டு 636. மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை என்பது தனக்குச் சுபாவ மாகிய அறிவைச் சாத்திரங்களுடனே கூட்டி வச்சிருக்கிற மந்திரிகளுக்கு மிகுந்த சூட்சத்தை யுடைய காரியங்கள் யாதொன்று மில்லை யென்றவாறு. எல்லாக் காரியங்களும் எளிதாயிருக்கு மென்பதாம். 637. செயற்கை யறிந்தக் கடைத்து முலகத் தியற்கை யறிந்து செயல் என்பது சாத்திரப் பிரகாரத்தினாலே காரியஞ் செய்யும் வகையறிந்த போதும் உலகத்திலே அப்போழுது நடக்கிற இயற்கையை அறிந்து அதற்கேற்கச் செய்ய வேணு மென்றவாறு. GT 638. அறிகொள் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன் என்பது 1. கேள்வி 2. வைத்திருக்கிற 3. குக்குமத்தை நுட்பத்தை (அச்சுநூல்) 3. காரி யங்கள் யாதொன்று மில்லை-சூழ்ச்சிகளாய் முன் நிற்பனயாவுள (அச்சுநூல்)