பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

503

என்ன? இத்துன்ப நோய் செய்தவரிடத்திலே நமக்கு இரங்கி வரக் கருதல் உண்டாகாது என்றவாறு.

1244. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
            தின்னு மவர்க்காண லுற்று

என்பது இதுவுமது

நெஞ்சே! நீ அவர் பால் செல்லலுற்றாயாயின், இக்கண்களையும் உடன் கொண்டு போவாயாக; அல்லாமல் நீ மாத்திரமே போனால், இக்கண்கள் தாம் அவரைக் காண்டல் வேண்டி நீ காட்டென்று என்னைத் தின்பன போன்று வாதைப்படுத்தா நிற்கும் என்றவாறு.

1243. செற்றா ரெனக் கை விடலுண்டோ நெஞ்சேயாம்
            உற்றா லுறாஅ தவர்

இதுவுமது என்பது

நெஞ்சே! யாம் தம்மை நினைக்கத் தாம் நம்மை நினையாத காதலரை வெறுத்தாரென்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலிநமக்கு உண்டோ? இல்லை என்றவாறு.

1246. கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
            பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

என்பது [1]நெஞ்சினைக் கழறியது

நெஞ்சே! யான் அவரோடு பிணங்கினால், அந்தப் பிணக்கைப் புணர்ச்சியினாலே நீக்க வல்ல காதலரைக் கண்டால், பொய்யேயாயினும் ஒருகால் பிணங்கி அவரை விட்டுப் பிரியமாட்டாய்; நீ அவரைப் பொல்லாதவர் என்று பொய்க்காய்வு காயா நின்றாய்; இதனை விட்டு அவர் பக்கல் போகத் துணிவாயாக என்றவாறு.

1247. காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
            யானோ பொறேனிவ் விரண்டு

என்பது நாண் தடுத்தலின் அச்செலவு ஒழிவாள் சொல்லியது


  1. தலைமகன் கொடுமை நினைந்து செலவுடன்படாத நெஞ்சினைக் கழறியது பரிமேலழகர்