பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

509

அவரை மறவாமல் நினைந்தேனாயின் மறுமையிலே அவரை அடைந்து இன்புறலாம்; ஆனபடியினாலே மறக்கமாட்டேன் என்பதாம்.

1263. உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்

வரனசைஇ யின்னு முளேன்

என்பது

இன்பம் அனுபவிக்கிறதை விரும்பாமல் வெல்லுதலை நினைந்து நாம் துணையாகிறதை இகழ்ந்து, தம் ஊக்கம் துணையாகப் போயினார்; அதனை விட்டுத் திரும்பிவருவாரென்கிறதினாலே நான் இன்னும் பிராணனுடனே இருக்கிறேன் என்றவாறு.

அவர் வாரா ரென்பதறிந்தால் அன்றே இறந்து போவேனென்பதாம்.

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் னெஞ்சு

என்பது

நம்மேல் ஆசையை விட்டுப் பிரிந்து போனவர் மேல் கூடிய காமத்துடனே வருகிறதை நினைந்து என்நெஞ்சு வருத்தம் ஒழிந்து மென்மேலும் சந்தோஷத்தை அடையா நின்றது என்றவாறு.

1265. காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்குமென் மென்றோட் பசப்பு

என்பது

கண்கள் சந்தோஷப் படும்வகை என் கணவனை யான் காண்பேனாக; அப்படிக் கண்டபின் என் தோளிலே பூத்த பசலை தானே நீங்கும் என்றவாறு.

கேட்டதனாலே நீங்கா தென்பதாம்