பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518

திருக்குறள்

1290. கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத

லென்னினும் தான் விதுப் புற்று

.

என்பது இதுவுமது

காதலி முன்னே யொருநாள் புணர வேண்டிச் சென்ற என்னுடனே தன்கண் மாத்திரத்தினாலே பிணங்கி, என்னிலும் முந்தித் தான் புணரவேண்டி, அந்தப் பிணக்கை மறந்துஎன்னுடனே கூடினாள் என்றவாறு.

கண்ணினாலே பிணங்குதல், கண் சிவந்து பார்க்கிறது

ஆக அதிகாரம் ளஉ௯ க்குக்குறள் சநஉள௯௰

இப்பால் 130. நெஞ்சொடு புலத்தல்

என்பது, பிணங்கக் காரண முண்டான வழியும், பிணங்க நினையாமல், புணரக் கருதுகின்ற நெஞ்சுடனே, தலைமகள் பிணங்கலும், தலைமகன் பிணங்கலுமாம்.

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே

நீயெமக் காகா தது

என்பது, தலைமகனிடத்திலே தப்புண்டான போதும் பிணங்க நினையாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது:

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை நினையாமல் அவருக்காய் இருக்கிறது கண்டும், நீ எமக்காய் நில்லாமல் அவரை நினைக்கிற காரணம் யாது? என்றவாறு.

1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச்

செறாஅரெனச் சேறியென் னெஞ்சு

என்பது இதுவுமது

(*என் நெஞ்சே, மேலும் நம்மிடத்திலே அன்பில்லாதவரை உள்ளவாறறிந்தவிடத்தும், நாம் போனாற் கோபித்துக்