பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 108

அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். S();

நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மானமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும். $02

அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லா தவரிடத்திலும், ஆராய்ந்தால் அறியாமை இல்லாமல் இருப்பது என்பது அருமையாகும். 503

ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும். $64 ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும். 505

உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள். $06

அறியவேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால் எல்லாவகையான அறியாமையையும் அது தரும். 507 தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு, அவனுக்குமட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும் தீராத துன்பம் உண்டாகும். 508 ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம் ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும். 509 ஒருவனைப்பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும். Sł0