பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 88. பகைத்திறம் தெரிதல்

பகையெனும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று. 871

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. 872

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். 873

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874

தன்துணை யின்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றி னொன்று. 875

தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். 876

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவரகத்து. 877

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு 878

இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. 879

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். 880