பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல் 218

தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்: அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை. 05: ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து தின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும். 1052 ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னேபோய் நின்று, அவரிடம் ஒருபொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஒர் அழகு ஆகும். l{}53 தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும். 1054 முன்னால் நின்றபோதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்ட சக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர். iO55 உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால், மானம் விடாமல் இரப்பவருக்கு, அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரைவிட்டுப் போய்விடும். 1056 தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு. 1057 வறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தை யுடைய பெரிய உலகினரின் போக்கும்வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும். 1058 தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாதபோது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்! 1059 இரப்பவன் ஒருபோதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்கவேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவாது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும். }{}60