பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 256

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின. 1231 பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வனபோல் உள்ளனவே! 1232 காதலரோடு கூடியிருந்த நாட்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவைபோல் உள்ளனவே! 1233

தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச் செய்கின்றனவே! 1234 தொடிகளும் கழன்றுவீழ, தம் பழைய அழகும் கெட்டுப்போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே! #235 தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியவர் என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே! #236 நெஞ்சமே கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச்சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ! 1237 தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை திறத்தை அடைந்துவிட்டதே! #238 முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழைபோன்ற கண்களும் அழகிழந்து, பசலைநிறம் அடைந்து விட்டனவே! 1239 காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலைநிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலைநிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது! #24()