பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 52

உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும் அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் உயிருக்கு ஊதியம் என்பது வேறு யாதும் இல்லை. 23| புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது. 232

உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை. 233 உலகத்தின் எல்லைவரை பரவிநிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது அப் புகழாளனையே விரும்பிப் போற்றும். 234 புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற்சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒருபோதுமே கிடையாது. 235 உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும் புகழ் இல்லாதவர் தோன்றுவதைவிடத் தோன்றாமற்போவதே நல்லது. 236 தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்துகொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்துகொள்வது எதற்காகவோ? 237 தமக்குப் பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள். 2.38

புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங்கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும். 239 வசை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர். 240