பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 படை - தலைமக்கள் இவ்வழி இல் - என்பனவற்றையெல் லாம் நினைவில் நிறுத்தி அரிய உண்மைகளை அறிதல் வேண்டும். 78. படைச் செருக்கு படையின் மறமிகுதியினைக் கூறுவதாகும். மறம் செறிந்த வீரர்கள் நிறைந்திருப்பதே படைக்குச் சிறப்பாகும். மனோதிடத்தினை வற்புதுத்திக் கூறுகிறது, போர் விரனொருவன் தனது வீரச் சிறப்பினை நேருக்கு நேர் நின்று கூறுவதாக முதற்குறட்பா விளக்கம் செய்கிறது. மறவனின் மனப் பண்பு யானையினையும் முயவினை யும் காட்டி இரண்டாம் பாடலில் கூறப்படுகிறது. இக்குறட். பாவில் இனிது' என்பது சிந்திக்கத் தக்கதாகும். மறவர் களுக்குப் போராண்மையும், ஊராண்மையும் மிக உயர்ந்த பண்புகளாகும். இதனை மூன்றாம் குறட்பா எடுத்துக் காட்டுகிறது. r * . . ; நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று குறட்பாக்களும் 'ஊறஞ்சாமை"யினைத் தெளிவுபடுத்துகின்றன. அதாவது எவ்விதத் துன்பம் நேர்ந்த போதிலும் பகைவரை எதிர்த்தே நின்று போரிடுவதைக் கூறுவதாகும். கடைசி நான்கு. குறட்பாக்களும் வீரமறவன் உயிரினைப் பொருட்படுத்த மாட்டான் என்று விளக்கம் தருகிறது. நான்காம் பாடல் யானையினை முன் நிறுத்திக் கூறுகிறது என்பது எக்காலத்தி லும் போரில் யானைகள் வந்து போரிடும் என்பதைக் குறிப்ப தாகக் கொள்ளுவதன்று. . . . * - மறவனின் வீரப்பண்பு எத்தகையது என்பதே புரிந்து கொள்ள வேண்டியதாகும். உடம்பில் பாய்ந்திருக்கும். வல் என்பது சிந்திக்கத்தக்கது. அவன் ஊறு அஞ்சாதவன். ஐந்து ஆறு பாடல்கள் வீரனின் வீரத்திற்கு இழுக்கு யாது என்பதனைக் கூறி முறையே அழித்து இமைப்பின்'