பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 பிறரிடமும் இப்படித்தானே என்றாளாம். தன்னை உணர்த்தினும் காயும்" என்று தொடங்கும் ஒன்பதாம் பாடல் இதனை எடுத்துரைக்கின்றது. கடைசியாக நாயகன் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டு பேசாமலேயே இருந்தான். அப்பொழுதும் ஊடிக் கொண்டாள். ஏனென்றால், என்னுடைய உறுப்புக்களை உற்றுப்பார்த்து நீங்கள் நேசிக்கும் காதலியுடன் ஒப்பிடு கிறீர்களோ என்றாளாம். 'நினைத்திருந்து நோக்கினும் காயும்’ என்று தொடங்கு கின்ற பத்தாம் பாடல் இந்த உண்மையினைப் புலப்படுத்தி விடுகிறது. அனைத்து நீர்' என்று குறிப்பிட்டது மிகவும் சிந்திக்கத் தக்கதாகும், 133. ஊடல் உவகை இன்றியமையாச் சிறப்புடைய ஊடலால் தங்களுக்குக் கூடல் இன்பம் சிறந்திருந்த போது அச்சிறப்பிற்குக் காரண மான ஊடலைத் தலைமகள் உவத்தலையும், தலைமகன் உவத்தலையும் கூறுவதாகும். ஊடல் செய்து கொள்ளுவதற்கான தவறு அவர்மீது இல்லையென்றாலும், அவ்வாறு ஊடுதலால் அவரது அன்பினை மிக அதிகமாகப் பெறுகின்ற வாய்ப்பாக இருக்கின்றதென்று முதற்குறட்பா கூறுகிறது. 'இல்லை தவறு அவர்க்கு" என்று குறட்பா தொடங்கி உண்மை உணர்த்துகிறது. நல்லளி வாடினும் பாடுபெறும்' என்று முடிகின்ற இரண்டாம் குறட்பா. ஊடலினால் தலைவன் அளிக்கின்ற அன்பு சிறிது வாடுவது போன்று தோன்றினாலும், அது பெருமையுடையதேயாகும். புலவி என்பது சிறு பிணக்கினையும், துணி என்பது கொஞ்சம் பெரிய பிணக்கினையும் குறிப்புனவாகும், -