பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 8 தேவருலகம் என்று கூறப்படுவது போற்றிப் பாராட்டு வதென்பது புகழுள்ளவர்களையேயாகும் என்று நான்காம் குறட்பா கூறி இவ்வுலகப் புகழே மேன்மையான தென்று உணர்த்திற்று. அழியக் கூடிய உடம்பை வைத்துக் கொண்டு அழியாத புகழுடம்பினைச் செய்பவர்களே வித்தகர்கள் என்ற பேருண்மையினை ஐந்தாம் குறட்பா தெளிவுபடுத்து கிறது. நான்கு, ஐந்து குறட்பாக்கள் புகழ் உடையார் எய்தும் மேன்மையினை உணர்த்தின. மக்களாய்ப்பிறந்து வாழ்பவர்கள் புகழில்லாமல் உலகில் வாழ்தலும் பிறர் கான இருத்தலும் தேவையில்லை என்பதனை ஆறாம் குறட்பா வலியுறுத்தும். தோன்றுதல்" என்பதற்கு பலர் காண தோன்றுதல் என்று கொள்ளுவதும் சிறப்புடையதேயாகும். ஆறுமுதல் ஒன்பதாம் பாடல் வரை புகழில்லாதவர்களது தாழ்வு கூறப்பட்டது. வாழ்வார் என்பவர்களையும் வாழாதார் என்பவர் களையும் பிரித்துக் காட்டிப் பத்தாம் குறட்பா விளக்கம் செய்கின்றது. வசை ஒழிய இசை ஒழிய என்பன சிந்தனைக்குரியனவாகும். அதுவே போன்று வாழ்வார்ன வாழாதார் என்பவைகளுமாகும். இசை என்பது புகழி னைக் குறிக்கும். முதல் இரண்டு பாக்களிலும் ஈதல்' என்பதன் கருத்து குறிக்கப்பட்டு அதுவே புகழுக்கு இன்றி யமையாக் காரணம் எனப்பட்டது. புலவர் என்று கூறப் பட்டதால், புத்தேள் உலகம் என்பதும் யாரை விரும்பும் யாரை விரும்பாது என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது. அறிஞர்களைவிட ஈகையாளர்களே போற்றப்படுவர் என்று ஒப்பிட்டுக் காட்டிய உண்மை சிந்தனைக்குரியது. 3 * : 'இசைபட வாழ்தல் -ஈவார்மேல் நிற்கும் புகழ்பொன்றாது நிற்பதொன்று இல்-புலவரைப் போற்றாது தகர்க்கல்லால் அரிது-புகழொடு தோன்றுக வாழ்வாரே வாழ்வார்.என்று குறித்தவையெல்லாம் புகழேந்தி வாழ்ப வர்களின் மேம்பாட்டினையும், புகழின் சிறப்பினையும்