பக்கம்:திருக்குறள் உரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 646. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். பிறர் விரும்பி ஏற்கத்தக்கவாறு சொல்லுதலும் பிறர் கூறும் சொற்களின் பயனைக் கொள்ளுதலும் நல்லவர்களின் கோட்பாடு. பிறர் சொற் பயன் கோடல் என்றதால் தாம் சொல்லுவதே சரி என்ற பிடிவாதப் போக்கு மறுக்கப்படுகிறது. 646. 647. சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது. எண்ணியவற்றைச் சொல்லும் வல்லமை உடையவனாகவும் , மறதியில்லாதவனாகவும், அவையஞ்சாதவனாகவும் உள்ளவனை யாரும் வெல்லுதல் இயலாது. - பலர், நிறைய எண்ணுவார்கள். ஆனால், சொல் வன்மையின்மையினால் ஆதரவு திரட்ட இயலாது என்ற கருத்தைச் சொலல் வல்லன்” என்று கூறி உணர்த்தியது. 'சோர்விலன்' தாம் கூறும் சொற்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படாமையினால் தளர்ந்து போய்த் தொடர்நிலை நிற்காமையை உணர்த்தியவாறாயிற்று. 'அஞ் சாண்’’எண்றது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சி எண்ணுவதைச் சொல்லாமலேயே தவிர்த்தல் என்றும் பொருள் கொள்ளலாம். 647. 648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது சொல்லுதல் வல்லாரப் பெறின். சொல்லப் பெறும் காரியங்களை முறைப்படுத்தி இனிய முறையில் சொல்லும் திறனுடையாரைப்பெறின் உலகம் அவர்தம் சொற்களைக் கேட்டுத் தொழிற்பாடுறும். இத்திருக்குறள் வரலாற்றுப் போக்கில் ஆய்வுக்குரியது. பலரைச் செயற்பாடுறுத்த வேண்டும் எனில் முறையாக இனிதாக ஆணையிடும் சொல்லாற்றலும் வேண்டும் என்பதாயிற்று. 648. 649. பலசொல்லக் காமுறுவர்மன்ற மாசு அற்ற சிலசொல்லல் தேற்றா தவர். நல்லனவாய் சில சொற்களைக் கொண்டு கேட்பாருக்குத் தெளிவுண்டாக்க இயலாத வர்கள் பலப்பல சொல்லக் காமுறுவர். தெளிவு, சொற்களின் தொகுதியில் அல்ல, சொல்லப்பெறும் முறையில்தான் இருக்கிறது. தெளிவாய்ச் சொல்லும் திறனற்றவர்களே பல தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 197