உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் உரை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் இயலாதவர்களும் இருப்பர். வாழ இயலாதவர்களுக்கும் பொறுப்பேற்று வாழ்விப்பதே குடிசெயல். மற்றவர் சுமையையும் பொறுப்பையும் முணுமுணுக்காது தாங்குதலால் “பொறை' என்றார். உலகவழக்கில், “பாரந்தாங்கல்' என்பர். “தமக்கன்புபட்டவர் பாரமும் பூண்பள்' என்ற அப்பரடிகள் வாக்கு நினைவுக்குரியது. 1027. 1028. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். தண்குடியை உயரச் செய்யும் பணிகளில் ஈடுபடுவோருக்குப் பணி செய்தலுக்குரியகாலம் இல்லை; காலங்கருதிக்கடத்தலாகிய சோம்பல் இல்லை; மானமும் இல்லை. காலம், சோம்பல், மானம் கருதினால் குடியை உயரச் செய்தலாகிய பணி கெடும். பருவம் நல்ல நாள் பார்த்துக் காத்திருத்தல், மூடத்தனம் முயற்சியுடையார்க்கு ஆகாது. மடிசெய்தல்: வாழ்க்கையின் இயல்பு சுறுசுறுப்பு. சோம்பல் செயற்கை. சோம்பல்தோன்றும் களம் காலம்பார்த்துக் காத்திருத்தல். விதியின்பால் உள்ள நம்பிக்கை, துன்பத்தைச் சந்திக்கும் துணிவின்மை. மானம் உதவும் உரிமையும் உடையார்மாட்டுப் பெருமை பாராட்டுதல் அல்லது மதிப்பினை எதிர்பார்த்தல். 1028. 1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. தனது குடும்பத்தைச் சார்ந்த குற்றத்தை நீக்கும் தொழிலில் ஈடுபடுவானின்உடல் துன்பத்துக்கே ஆளாகுமா? தான் பிறந்த குடும்பத்தின் குற்றங்களாகிய வறுமை, வேற்றுமை இவைகளை மாற்ற உழைப்பானை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அங்கீகரிப்பதில்லை. மாறாக, ஐயப்பாட்டுத் தொல்லைகள் தருவர். அதனால் குடும்ப மேம்பாடு கருதி உழைப்பவன் துன்பத்திற்கே ஆளாவான். இது உலக நியதி. இத்தகைய துன்பம் வரவேற்கத் தக்கது என்பதே திருக்குறள் கருத்து. 1029. 1030. இடுக்கண்கால் கொன்றிட விழும் அடுத்துளன்றும் நல்ஆள் இலாத குடி. தலைமுறைதோறும் தாங்கிக் காப்பாற்ற நல்ல ஆள் இல்லாத குடும்பம் இடுக்கண்ணின் காரணங்கள் தோன்றும் பொழுது வீழ்ந்து படும். 294 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை