பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாயிரம் 1. கடவுள் வாழ்த்த

அகரம் முதல எழுத்து எல்லாம்;-ஆதி

பகவன் முதற்றே, உலகு. 1 எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன; அதுபோல, உலகம் கடவுளை முதன்மையாகக் கொண்டது.

கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்? 2 கல்வி கற்றதன் பயன் கடவுளை வணங்குவது.

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். 3 கடவுளின் திருவடிகளை வணங்குவோர் இன்ப உலகில் நீடித்து வாழ்வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. 4 கடவுளை வணங்குவோருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன்

பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு. .5 கடவுளின் புகழைப் போற்றுகின்றவரிடம், அறியாமையால் ஏற்படும் நல்ல செயலும், தீய செயலும் சேர்வதில்லை.