பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

48. வலி அறிதல் (திறமையை அறிந்து காரியம் செய்வது)

வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும், தூக்கிச் செயல். 471 செய்ய நினைக்கின்ற செயலின் தன்மை, தன்னுடைய திறமை, எதிரியின் பலம், தனக்கும் எதிரிக்கும் துணை நிற்பவர் வலிமை ஆகியவற்ற ைஒப்பிட்டு ஆராய்ந்து செய்யவேண்டும்.

ஒல்வது அறிவது அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். 472 தம்மால் இயன்றதையும், தெரிய வேண்டியதையும் தெரிந்து கொண்டு, அதில் மனத்தைச் செலுத்தி, முயற்சியுடன் செய்கின்றவருக்கு முடியாத காரியம் ஒன்றும் இல்லை. உடைத் தம் வலி அறியார், ஊக்கத்தின் ஊக்கி, இடைக்கண் முரிந்தார் பலர். 473 தன்னுடைய ஆற்றல் என்னஎன்பதைத் தெரியாமல் ஊக்கத்தினால், ஒரு காரியத்தைச் செய்ய முற்பட்டு, இடையில் அதை முடிக்க முடியாமல் கெட்டுப் போனவர்

Lj6\}s.

அமைந்து ஆங்கு ஒழுகான், அளவு அறியான், தன்னை வியந்தான், விரைந்து கெடும். . 474 மற்றவர்களோடு ஒத்துப்போகாமல், தனக்கு உள்ள ஆற்றலையும் உணராமல், தன்னைப் பெரிதாகப் பாராட்டிக் கொண்டிருக்கிறவன் விரைவில் கெட்டுப் போவான். பீலி யெய் சாகாடும் அச்சு இறும்-அப் பண்டம் சால மிகுத்துப் பெயின். 475 மயில் இறகு மிகவும் மெல்லியது. அதையும் அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் பாரம் தாங்காமல் அச்சுமுறிந்து விடும். ஒரு பொருளின் தன்மையைவிட அதனுடைய வலிமை மிகவும் முக்கியம்.

1 O2