பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் அதிகாரம் 52

செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு எய்த உணர்ந்து, செயல் ! 516 ஒரு செயலைச் செய்கின்றவனுடைய குணத்தை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தகுந்த காலத்தோடு பொருந்தும்படி அந்தச் செயலைச் செய்விக்க வேண்டும்.

“இதனை, இதனால், இவன் முடிக்கும்’ என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல் : 517 இந்தக் காரியத்தை, இந்த முறையில் இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அவனிடமே அந்தக் காரியத்தை ஒப்படைக்க வேண்டும் (அப்படி ஆராயாமல் ஒப்படைப்பது அறிவீனம்). வினைக்கு உரிமை நாடிய பின்றை, அவனை அதற்கு உரியன் ஆகச் செயல்! 58 ஒரு காரியத்தைச் செய்து முடிக்க ஒருவனுக்கு உள்ள தகுதியை ஆராய்ந்த பிறகு, அவனை அந்தக் காரியத்தைச் செய்வதற்கு உரிமை உள்ளவனாக உயர்த்த வேண்டும். வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும், திரு. 519 தான் மேற்கொண்டிருக்கும் தொழிலிலே அக்கறை செலுத்துகின்றவனுடைய உறவைப் பற்றிச் சந்தேகப் படுபவனுடைய செல்வம் அழிந்து போகும். நாள்தோறும் நாடுக, மன்னன்-வினைசெய்வான் கோடாமைக் கோடாது உலகு. 520 தொழில் செய்கின்றவன் தவறு செய்யாமல் இருக்கும் வரையில் உலகம் வளமாக இருக்கும். ஆகையால், தொழில் செய்கின்றவன் தளராமல் இருக்கும்படி நாள்தோறும் அரசன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

111