பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் அதிகாரம் 53

பெருங் கொடையான், பேனான் வெகுளி, அவனின் மருங்கு உடையார் மா நிலத்து இல். 526 பெரிய கொடை வள்ளலாகவும், கோபம் கொள்ளாத வனாகவும் இருந்தால், அவனைப் போலச் சுற்றத்தார் களை நிறையப் பெற்றி ருப்பவர் உலகத்தில் யாரும் இல்லை.

காக்கை கரவா கரைந்து உண்ணும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. 527 காக்கை தனக்குக் கிடைத்த இரையை மறைத்து வைத்துத் தின்னாமல், சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். அதைப் போல, சுற்றமாகிய செல்வமும் அத்தகைய தன்மை உள்ளவருக்கே உண்டு.

பொதுநோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின், அது நோக்கி வாழ்வார் பலர். 528 அரசன், எல்லோரையும் சமமாகப் பார்க்காமல், அவனவன் சிறப்புக்கு ஏற்றபடி பார்த்தால், அதை விரும்பி சுற்றத்தாராக வாழ்கின்றவர் பலர்.

தமர் ஆகி, தன்-துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். 529 சுற்றத்தாராக இருந்தவர் பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் விலகி பொருத்தமற்ற காரணம் மறைந்ததும் மீண்டும் வந்து சேருவார். உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை, வேந்தன் இழைத்து இருந்து, எண்ணிக் கொளல். 580 காரணம் இல்லாமல், தன்னை விட்டுப் பிரிந்து சென்று, பிறகு ஒரு காரணமாக, தன்னிடம் வந்து சேருகின்றவனை விரும்பியதைக் கொடுத்து ஆராய்ந்து அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

413