பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

55. செங்கோன்மை

(நீதியோடு ஆட்சி புரிவது)

ஒர்ந்து, கண்ணோடாது, இறை புரிந்து, யார்மாட்டும் தேர்ந்து, செய்வஃதே முறை. 541 குற்றம் குறைகளை அறிந்து, பாரபட்சம் இல்லாமல் நடு நிலையில் இருந்து ஆராய்ந்து செய்வதே நீதிமுறை. வான்நோக்கி வாழும் உலகு எல்லாம்;-மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி. 542 உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து வாழ்கின்றன. அதுபோல, குடிமக்கள் எல்லாரும் அரசனுடைய நீதி தவறாத ஆட்சியை எதிர்பார்த்து வாழ்கின்றனர். அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் நின்றது-மன்னவன் கோல். 543 அறவோருக்கு உரிய வேத நூலுக்கும், அறத்துக்கும், அடிப்படையாக இருப்பது, அரசனுடைய நீதி தவறாத ஆட்சி முறை ஆகும். குடி தழிஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடி தழிஇ நிற்கும், உலகு. 544 குடிமக்களை அன்போடு நடத்தி, நீதிமுறை தவறாமல் ஆட்சி செய்கின்ற அரசனை உலகம் போற்றும். இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. 545 நீதிமுறையோடு ஆட்சி செய்யும் அரசனுடைய நாட்டில், பருவ மழை தவறாமல் பெய்து, பயிர் வளமும் ஒருங்கே உண்டாகும். -

116