பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

63. இடுக்கண் அழியாமை

(துன்பம் ஏற்படும்போது மனம் கலங்காமல் இருப்பது) இடுக்கண் வருங்கால் நகுக! அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல். 621 துன்பம் வரும்போது, அதை மகிழ்ச்சியோடு பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால், ஆந்தத் துன்பத்தை அடுத்து வரும் இன்பத் துக்கு நிகாரனது வேறு இல்லை. வெள்ளத்து அனைய இடும்பை, அறிவு உடையான் உள்ளத்தின் உள்ள, கெடும். 622 வெள்ளம் போல அளவற்ற துன்பம் வந்தபோதும் அறிவு உடையோர் மன உறுதியால், அதைப் பொறுத்துக் கொள்வார். அதனால், அந்தத் துன்பம் நீங்கி விடும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர்-இடும்பைக்கு இடும்பை படாஅதவர். 623 துன்பம் வந்தபோது அதற்காக வருத்தப்பட்டு, மனம் கலங்காத மன உறுதி உள்ளவர், அந்தத் துன்பத்துக்கே துன்பம் உண்டாக்கி, அதை வெற்றி கொள்வார்.

மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624 மேடு பள்ளமான இடங்களில் எல்லாம், தன் பலத்தால் பாரமான வண்டியை இழுத்துச் செல்கின்ற காளைபோல, விடா முயற்சி உடையவனுக்கு வந்த துன்பமானது தானே துன்பப்பட்டு விடும்.

அடுக்கி வரினும், அழிவு இலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும். 625 மனம் கலங்காத ஆற்றல் உடையவனுக்கு அடுத்து அடுத்து தொடர்ந்து துன்பம் வந்த போதிலும் அதுவே (அவனை ஒன்றும் செய்யாது) ஒன்றை ஒன்று துன்பப்படுத்திக் கொள்ளும்,

132