பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

64. அமைச்சு (அமைச்சரின் தகுதி)

கருவியும், காலமும், செய்கையும், செய்யும் அருவினையும், மாண்டது-அமைச்சு. 631 செயலுக்குத் தகுந்த, சாதனமும், பருவகர்லமும், செய்யும் வகையில், பயன்தரக்கூடிய செயலும் இவற்றைச் சிறப்பாகச் செய்ய திறமை உள்ளவனே அமைச்சன்,

வன்கண், குடிகாத்தல், கற்று அறிதல், ஆள்வினையோடு, ஐந்துடன் மாண்டது-அமைச்சு. 632 சுறுசுறுப்பு, குடும்பச் சிறப்பு, குடிமக்களைக் காப்பது, நூல்களைக் கற்று அறிந்த அரசியல் அறிவு, முயற்சி ஆகிய ஐந்திலும் வல்லவனே சிறந்த அமைச்சன். பிரித்தலும், பேணிக்கொளலும், பிரிந்தார்ப் பொருத்தலும், வல்லது-அமைச்சு. 633 பகைவருக்குத் துணையாக இருப்பவரைப் பிரிப்பது, தன்னைச் சேர்ந்தவரை ஆதரிப்பது, பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்வது ஆகியவற்றில் திறமை உள்ளவனே அமைச்சன். .

தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச் சொல்லலும் வல்லது-அமைச்சு. 634 காரியத்தைச் செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது, ஆராய்ந்த செயலைச் செய்வது, தன் கருத்தைத் துணிந்து சொல்லுவது ஆகியவற்றில் வல்லவனே அமைச்சன்.

அறன் அறிந்து, ஆன்று அமைந்த சொல்லான், எஞ்ஞான்றும் திறன் அறிந்தான், தேர்ச்சித் துணை. 635 நன்மையைச் செய்கின்ற தன்மையும், அறிவு நிறைவும், சொல்வன்மையும், செயல் திறனும் எப்போதும் அமைந்தவனே ஆலோசனை சொல்லத்தக்க துணைவன்.

134