பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் அதிகாரம் 65

வேட்பத் தாம் சொல்லி, பிறர் சொல் பயன் கோடல் மாட்சியின் மாசு அற்றார் கோள். 646 பிறர் விரும்பிக் கேட்கும்படி, பயன் உள்ளதைச் சொல்வதும், பிறர் சொல்லுவதில் பயனை அறிந்து கொள்ளுவதும் குற்றமற்ற சிறப்பு உடையவரின் கொள்கை,

சொலல் வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது. 647 தன்னுடைய கருத்தைச் சொல்லத் திறமை உள்ளவனாய், சொல்லும் போது தவறாகச் சொல்லாதவனாய், பயப்படாதவனாய் இருப்பவனை எவராலும் வெல்ல முடியாது.

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648 கருத்துக்களை முறையாக இணைத்து, இனிமையாகச் சொல்லக் கூடிய திறமைசாலி இடும் கட்டளையை, மக்கள் தட்டாமல் கேட்டு நடப்பார்கள்.

பல சொல்லக் காமுறுவர் மன்ற-மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர். 649 பயன்தரும் சொற்களைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாதவர் , நீண்ட நேரம் வளவள, என்று பேச ஆசைப்படுவார்.

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்-கற்றது உணர விரித்து உரையாதார். 650 பல நூல்களைப் படித்தவர், நூல்களின் கருத்தைத் தெளிவாகச் சொல்ல முடியாதவர், மலர்ந்திருந்தும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

437