பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் அதிகாரம் 66

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை. 656 தன்னைப் பெற்ற தாய் பட்டினியால் துன்பப்படுகிறாள் என்றாலும், சான்றோர் பழி சொல்லுவதற்குக் காரணமான இழிவான் செயலைச் செய்யக் கூடாது.

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின், சான்றோர் கழி நல்குரவே தலை. 657 பழிக்கு ஆளாகி, இழிவான செயலைச் செய்து அதனால், பெறுகின்ற வளமான செல்வ வாழ்வை விட, அத்தகைய செயலைச் செய்யாததால், சான்றோர் அடைகின்ற துன்பமான வறுமையே மேலானது.

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும், பீழை தரும். 658 தீயவை என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட செயல்களை நீக்காமல் செய்தவருக்கு, அவை வெற்றியாக முடிந்தாலும் முடிவில் அதனால் துன்பமே ஏற்படும்.

அழக் கொண்ட எல்லாம் அழப் போம்; இழப்பினும், பிற்பயக்கும், நற்பாலவை. 659 பிறர் வருந்தி அழும்படிப் பறித்துக் கொண்ட செல்வம் எல்லாம் அப்படிப் பறித்துக் கொண்டவனை அழ வைத்து விட்டுப்போய்விடும். நல்ல வழியில் வந்த செல்வத்தை இழந்து விட்டாலும் பிறகு வந்து நன்மை தரும். சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல்-பசு மண்கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று. 660 வஞ்சனையால்-தீயவழியில் செல்வத்தைச் சேர்த்து, அதைக் காப்பாற்றி வைப்பது, வேக வைக்காத பச்சை மண்குடத்தில் தண்ணீரை ஊற்றி வைப்பது போன்றது.

139