பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் அதிகாரம் 70

குறிப்பு அறிந்து, காலம் கருதி, வெறுப்பு இல வேண்டுப, வேட்பச் சொலல்! 696 மன்னருடைய குறிப்பை உணர்ந்து, தகுந்த சமயத்தை எதிர்நோக்கி, வெறுப்பானவற்றைச் சொல்லாமல், விருப்பமான வற்றை, அவர் விரும்பும் முறையில் சொல்ல வேண்டும்.

வேட்பன சொல்லி, வினை இல எஞ்ஞான்றும் கேட்பினும், சொல்லா விடல்! 697 மன்னர் விரும்புகின்றதை மட்டுமே சொல்லி, வேண்டாத பயன் இல்லாததை அவரே கேட்ட போதிலும் எப்போதும் சொல்லாமல் இருக்க வேண்டும்.

‘இளையர், இன முறையர் என்று இகழார், நின்ற ஒளியொடு ஒழுகப்படும். - ‘மன்னர் எனக்கு இளையவர், இன்ன உறவு முறை: என்று கூறி இகழாமல், அவருடைய தகுதிக்குத் தக்க புகழுடன் பொருந்தி நடந்து கொள்ள வேண்டும். ‘கொளப்பட்டேம் என்று எண்ணி, கொள்ளாத செய்யார்துளக்கு அற்ற காட்சியவர். 699 ‘மன்னர், தம்மிடம் மிகுந்த மதிப்பு உள்ளவர் என்று எண்ணி, மன்னர் விரும்பாதவைகளை அறிவுத் தெளிவுடையவர் செய்ய மாட்டார்.

பழையம் எனக் கருதி, பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 700 ‘மன்னரும் தானும் நீண்ட காலப் பழக்கம் உள்ளவர் என்று கருதி, தகாத காரியங்களைச் செய்யும் உரிமை கெடுதியை உண்டாக்கும்.

(இந்தப் பகுதி மன்னர் என்று குறிப்பிட்டாலும், முதலாளி வர்க்கத்தினர். செல்வந்தர் ஆகியோருக்கும் பொருந்தும்.)

447