பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

83. கூடா நட்பு

(சேரக்கூடாத நட்பு) நீர் இடம் காணின், எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. 821 விரோதியாக இருந்தவர் திடீரென்று உறவாட வந்தால், தகுந்த சந்தர்ப்பம் பார்த்து தன்னை நீக்குவதற்கான பட்டடைக் கல்லாகக் கருதி அவரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இனம் போன்ற இனம் அல்லார் கேண்மை, மகளிர் மனம் போல, வேறுபடும். 822 நண்பரைப் போலவே இருந்து, உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாதவரின் நட்பு விலைமகளின் மனம் போல சமயத்திற்கு தகுந்தபடி மாறக் கூடியது (விலைமகள் என்பதற்குப் பதிலாக பெண்கள் என்று சிலர் கருகின்றனர்)

பல நல்ல கற்றக்கடைத்தும், மனம் நல்லர் ஆகுதல் மானார்க்கு அரிது. 823 பலவகையான சிறந்த நூல்களைப் படித்துத் தெளிந்த போதிலும், நல்ல மனம் உள்ளவராகப் பழகுவது உள்ளன்பு இல்லாதவருக்கு (பகைவருக்கு) இயலாது. முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை அஞ்சப்படும். &24 முகத்தில் இனிமை காட்டி, சிரித்துப் பேசி மனத்தில் தீமை கொண்டிருக்கும் வஞ்சகருடன் பழகப் பயப்பட வேண்டும்.

மனத்தின் அமையாதவரை, எனைத்து ஒன்றும் சொல்லினான் தேறற்பாற்று அன்று. 825 உள்ளத்தில் அன்பு இல்லாதவர் (தன்னோடு ஒன்று படாதவர்) பேச்சை நம்பி, எந்த காரியத்தையும் செய்யக் கூடாது.

472