பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

87. பகைமாட்சி

(பகைமையால் உண்டாகும் கேடு)

வலியார்க்கு மாறு ஏற்றல் ஒம்புக! ஒம்பா,

மெலியார்மேல் மேக, பகை ! 861 தன்னைவிட வலிமையாளர்மேல் பகைகொண்டு எதிர்ப்பதைக் கைவிட வேண்டும். தன்னைவிட மெல்லியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ளலாம். (அதாவது வலிமையாளர் என்றால், பண வசதி, உடல் பலம், அதிகாரம் ஆகியவை.)

அன்பு இலன்; ஆன்ற துணை இலன்; தான் துவ்வான்;என் பசியும், ஏதிலான் துப்பு? 862 அன்பு இல்லாதவன், சிறந்த துணை இல்லாதவன், தானும் வலிமை இல்லாதவன் இப்படிப்பட்டவன் பகைவனுடைய வலிமையை எப்படி ஒழிக்க முடியும்?

அஞ்சும்; அறியான்; அமைவு இலன்; ஈகலான்;

தஞ்சம் எளியன், பகைக்கு. - 863 எதற்கும் பயப்படுகின்றவன், அறிவு இல்லாதவன், நல்லவரோடு சேராதவன், ஈயாத கஞ்சன், இப்படிப்பட் - பகைவரால் வெற்றி கொள்ளுவதற்கு எளிதாக இருப்பான்.

நீங்கான் வெகுளி; நிறை இலன்;-எஞ்ஞான்றும், யாங்கணும், யார்க்கும், எளிது. 564 நீங்காத கோபம் உடையவன், பேச்சிலும் செயலிலும் தடுமாறும் மனநிலை உள்ளவன். இப்படிப்பட்டவன் எப்போதும், எங்கும், எவர் முன்னிலையிலும் சாமான்ய மாணவனாகவே கருதப்படுவான்.

வழி நோக்கான்; வாய்ப்பன செய்யான்; பழி நோக்கான்; பண்பு இலன்; பற்றார்க்கு இனிது. 865 நியாயமான வழியில் நடந்து கொள்ளாதவன், செய்ய வேண்டிய காரியத்தை உடனுக்கு உடன் செய்யாதவன், பழி பாவச் செயலுக்குப் பயப்படாதவன், நல்ல குணம் இல்லாதவன், அத்தகையவனை பகைவர் தோற்கடிப்பதில் மகிழ்வார். # 80