பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

94. பெண்வழிச் சேறல்

(மனைவி சொல் கேட்டு நடப்பது)

மனை விழைவார் மாண் பயன் எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது. 90s மனைவியின் ஆசைக்கு உட்பட்டு அவள் சொன்னபடி நல்லது கெட்டது ஆராயாமல் நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். காரியத்தைச் செய்ய விரும்புகிறவர் விரும்பத்தகாத நடத்தையும் அதுவே. பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் நானாக, நானுத் தரும். 902 கடமையைக் கருதாமல், மனைவியின் பெண்மையை விரும்பி நடப்பவனுடைய வாழ்க்கை பெரிய அவமானத் துக்கு உள்ளாகி, வெட்கத்தால் தலைகுனிய நேரிடும். இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை, எஞ்ஞான்றும், நல்லாருள் நாணுத் தரும். 903 மனைவியிடம் பணிந்து நடக்கும், முறை கெட்ட செயல் ஒருவனுக்கு எப்போதும் நல்லவர்கள் மத்தியில் வெட்கத்தால் தலைகுனிவு ஏற்படும்.

மனையாளை அஞ்சும் மறுமைஇலாளன் வினை ஆண்மை வீறு எய்தல் இன்று. 904 மனைவிக்குப் பயந்து நடக்கின்ற புகழ் இல்லாத வாழ்க்கை உடையவனுக்குக் காரியத்தை முடிக்கும் திறமை இருந்தாலும், அது பெருமையாக இருக்காது. (பணிந்து நடப்பது வேறு பயந்து நடப்பது வேறு) இல்லாளை அஞ்சுவான், அஞ்சும் மற்று எஞ்ஞான்றும், தல்லார்க்கு நல்ல செயல். 905 மனைவிக்குப் பயந்து நடக்கின்றவன் எப்போதும் எதற்கும் நல்லவர்களுக்கு நன்மை செய்வதற்குப் பயப் படுவான்.

188