பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

94. சூது

(சூதாட்டத்தால் ஏற்படும் தீமை) வேண்டற்க, வென்றிடினும் சூதினை! வென்றது.உம், துரண்டில்-பொன் மீன் விழுங்கியற்று. 931 வெற்றியே கிடைக்குமானாலும் சூதாட்டத்தை விரும்பத் கூடாது. சூதில் வென்ற பொருளும் தூண்டில் இரும்பை உணவு என்று மயங்கி மீன் ஏமாந்தது போன்றது.

ஒன்று எய்தி, நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்நன்று எய்தி வாழ்வதோர் ஆறு? 932 ஒரு தடவை வெற்றி பெற்று, நூறு மடங்கு பொருளை இழந்து தவிக்கும் சூதாடிகள் நல்லபடியாய் வாழ வழி கிடையாதா? உருள் ஆயம் ஒவாது கூறின், பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும். 933 உருண்டு ஓடும் சூதாடும் கருவியால் வரும் வருமானத்தை இடைவிடாமல் சொல்லிச் சூதாடுவானகில் பொருள் வருமானம் அவனை விட்டுப் போய் பகைவரிடம் சேர்ந்து விடும்.

சிறுமை பல செய்து, சீர் அழிக்கும் சூதின், வறுமை தருவது ஒன்று இல். 934 துன்பம் பலவற்றையும் உண்டாக்கி, வாழ்வைச் சீரழிக்கும் சூதைப் போல வறுமை தருவது வேறு எதுவுமே இல்லை.

கவறும், கழகமும், கையும், தருக்கி இவறியார் - இல்லாகியார். 935 சூது கருவியும், ஆடும் களமும், சூதாடும் கைத்திறமைய்ையும் பெருமையாக எண்ணி அதை விட்டு ஒழிக்காதவர், எவ்வளவு செல்வம் உள்ளவராக இருந்தாலும் அவ்வளவையும் இழந்து விடுவார்.

j94