பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

95. மருந்து

(நோயற்று வாழ்வதற்கு மருந்து) மிகினும் குறையினும், நோய் செய்யும் - நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று. 941 உணவும் உழைப்பும் அதிகமானாலும் குறைந்தாலும் மருத்துவ அறிஞர் கூறும் வாதம், பித்தம், சிலேத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும். (அதற்குப் பதிலாக, காற்று, நீர், உணவு ஆகிய மூன்று என சிலர் கூறுகின்றனர்.) மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு - அருந்தியது, அற்றது போற்றி உணின். 942 முன்பு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆனதை அறிந்து, தகுந்த அளவு உணவு சாப்பிட்டால் மருந்து என்பது உடலுக்கு வேண்டியது இல்லை. அற்றல், அளவு அறிந்து உண்க : அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு. 943 முதலில் சாப்பிட்ட உணவு சீரணம் ஆகிவிட்டதை அறிந்து, பிறகு உண்ண வேண்டிய அளவை அறிந்து சாப்பிட வேண்டும். அப்படிச் செய்வதே, உடம்பைப் பெற்றவன், அதை நீண்ட காலம் வைத்துக் காப்பாற்றுவதற்கு உரிய வழி. அற்றது அறிந்து, கடைப்பிடித்து, மாறு அல்ல துய்க்க, துவரப் பசித்து ! 944 முன் உண்டது செரித்ததை அறிந்து, பிறகு உண்ணும் உணவில் மாற்றம் இல்லாமல், உடம்புக்கு ஏற்ற உணவைக் கடைப்பிடித்து, அதையும் நன்றாகப் பசித்த பிறகே சாப்பிட வேண்டும்.

196