பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் அதிகாரம் 104

உழவினார் கைம்மடங்கின், இல்லை-விழைவது உம் விட்டேம்’ என்பார்க்கு நிலை. 1036 உழவர்கள் உழவு செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு இருந்து விடுவார்களேயானால் எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டோம் என்று சொல்லும் துறவிகளுக்குக் கூட வாழ்வு இல்லை. தொடிப் புழுதி கஃசா உணக்கின், பிடித்து எருவும் வேண்டாது, சாலப் படும். 1037 ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி ஆழ உழுது ஆறவிட்ட நிலத்திற்கு, ஒரு பிடி எருவும் இடவேண்டாம். எரு இல்லாமலே அந்த நிலத்தில் பயிர் செழிப்பாக விளையும். ஏரினும் நன்றால், எரு இடுதல்; கட்டபின், நீரினும் நன்று, அதன் காப்பு. - 1038 உழுவதைவிட எரு இடுவது நல்லது; அதன்பின், களை எடுத்து நீர்பாய்ச்சுவதைவிட விளைந்த பயிரைக் காவல் காப்பது நல்லது. செல்லான் கிழவன் இருப்பின், நிலம் புலந்து இல்லாளின் ஊடிவிடும். 1939 நிலத்துக்காரன் நிலத்தைப் போய் பார்த்துக் கண்காணிக்கா விட்டால், அந்த நிலம் அவனுடைய மனைவியைப் போல, அவனை வெறுத்துக் கோபம் கொள்ளும். (பயிர் விளையாது). இலம்! என்று அசைஇ இருப்பாரைக் கானின், நிலம் என்னும் நல்லாள் நகும். f{}40 கையில் பொருள் இல்லையே என்று சோம்பி இருப்பவரைக் கண்டால், அவனுடைய முட்டாள் தனத்தை நினைத்து நிலமகளான பூமி தனக்குள் சிரிப்பாள்.

245