பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

108. கயமை

(கெட்ட குணம் உள்ள கயவர்) மக்களே போல்வர், கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல். 1071 மக்களைப் போலவே இருப்பார் கயவர். அவரைப் போல மக்களை ஒத்திருப்பவரை (மேல் மக்களிலும் கீழ் மக்களிலும்) நாம் கண்டதில்லை. நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்நெஞ்சத்து அவலம் இலர்! 1072 நன்மையை அறிந்த நல்லவரை விடக் கயவரே நன்மை உடையவர். ஏனென்றால், அவருடைய மனத்தில் எதற்கும் கவலை தோன்றுவது இல்லை. தேவர் அனையர், கயவர்-அவரும் தாம் மேவன செய்து, ஒழுகலான் ! 1073 கயவரும்கூட, தேவரைப் போன்றவரே, ஏன் என்றால், கயவரும் தேவரைப் போலவே தாம் ஆசைப்படுகின்ற வைகளைச் செய்து மனம் போன போக்கில் நடப்பவர்கள். அகப் பட்டி ஆவாரைக் காணின், அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும், கீழ். 1074 கயவர், தம்கீழ் அகப்பட்டு, தமக்கு பணிந்து நடக்கின்றவரைக் கண்டால், அவரைவிடத் தாம் மேம்பட்டவராக நினைத்துப் பெருமை பாராட்டிக் கொள்வார்.

அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம் அவா உண்டேல், உண்டாம் சிறிது. 1075 கயவர் ஒழுங்காய் இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் தம் செயலைத் தெரிந்து கொண்டால் தண்டனை கிடைக்குமே என்ற பயம். சில வேளைகளில் ஏதேனும் ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசை ஏற்படுகின்ற போது ஒழுங்கானவர்போல் நடிப்பார்.

222