பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. களவு இயல்

109. தகை அணங்கு உறுத்தல்

(தகுதி வாய்ந்த பெண்ணைக் கண்டு அச்சமுற்று மயங்குதல்)

அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ!-கனங்குழைமாதர்கொல் : மாலும், என் நெஞ்சு. 108t மலர்ச்சோலையில் மின்னும் காதணிகளை அணிந்துள்ள இந்த அழகி, வண்ணமயிலோ? அல்லது தேவலோகப் பெண்ணோ? அல்லது மானிட மங்கையோ? என்மனம் மயங்குகின்றதே!

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்-தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து. 1082 அவள் என்னைப் பார்த்தாள்: நானும் அவளை நோக்கினேன்; ஆ! அவள் தன் பார்வையினால் மட்டும் தாக்குவது போதாது என்று போர்ப்படையையும் கொண்டு வந்தது போல் அல்லவா காணப்படுகிறது, அவள் என்னைப் பார்க்கும் அந்தப் பார்வை.

பண்டு அறியேன், கூற்று’ என்பதனை; இனி அறிந்தேன்; பெண் தகையான் பேர் அமர்க் கட்டு. #083 ‘உயிரைக் கொண்டு போகிறவன் எமன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், இப்போது நேரில் தெரிந்து கொண்டேன் எப்படி என்றால், பெண் தன்மையோடு கூடி போர் புரியும் அந்தப் பெரிய கண்களே எமன் என்பதை அறிந்தேன்.