பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம்

114. நானுத் துறவு உரைத்தல் (மனதில் எண்ணிய இரகசிய எண்ணங்களை நாணம் இன்றி கூறுவது)

காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம மடல் அல்லது இல்லை, வலி. 131 காதல் வசப்பட்டு, காதலியின் அன்பைப் பெற இயலாமல் தவிப்பவர்களுக்கு, மடல் ஏறி, அவள் அன்பைப் பெற முயற்சிப்பதைத் தவிர வேறு சிறப்பான வழி இல்லை.

நோனா உடம்பும் உயிரும், மடல் ஏறும்நாணினை நீக்கி நிறுத்து. 1132 காதலி இல்லாமல், வாழும் துன்பத்தையும் தவிப்பையும் தாங்கிக் கொள்ள இயலாத என் உயிரும், உடலும், வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணிந்து விட்டன.

நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன்; இன்று உடையேன், காமுற்றார் ஏறும் மடல். 1133 நான்த்தையும், நல்ல ஆண்மையையும் பெற்று, நலமுடன் முன்பு இருந்தேன். ஆன்ால், இப்போது அவற்றை விட்டு விட்டு, கர்ம நோய் மிகுந்தவர் ஏறும் மடல் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

காமக் கடும் புனல் உய்க்குமே-நாணொடு நல் ஆண்மை என்னும் புனை. 1134 நாணம், ஆண்மை என்னும் என்னுடைய நல்ல தோணிகளை, காமம் என்னும் பெரு வெள்ளம் வந்து கொண்டு போய் விட்டதே! இப்போது, எப்படி எதைக் கொண்டு கரை ஏறுவேன்?

தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு மாலை உழக்கும் துயர். 1135 மாலை போல் வளையணிந்த அந்தப் பெண்ணரசி, மடல் ஏறுகின்ற துன்பத்தை மட்டுமா தந்தாள்? மாலை நேரம் வந்தால், அவளை நினைத்து வருந்துகின்ற துன்பத்தையும் அல்லவா சேர்த்துத் தந்துவிட்டாள்.

236